பார்த்துப்பார்த்து செலவு செய்ய கற்றுக்கொண்டனர் வருவாய் இன்றி திண்டாடிய 82% மக்கள்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் 82 சதவீத மக்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலையால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டன. கொரோனா பரவலுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தொழில்கள் அடியோடு நசிந்து விட்டன. பலர் வேலையிழந்தனர். இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று சமீபத்தில் நாடு முழுவதும் மக்களிடையே ஆய்வு நடத்தியது.  இதில், சுமார் 82 சதவீதம் பேர் வருவாய் குறைந்து, செலவுக்கே திண்டாடியதாக தெரிவித்துள்ளனர். சேமிப்பிலும் கை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், செலவுகளில் கவனமாக இருந்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் பார்த்துப்பார்த்து கவனமாக செலவு செய்ததாக 95 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதுபோல், அடுத்த மாத செலவு பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றனர். 84 சதவீதம் பேர் செலவை வெகுவாக குறைத்து விட்டனர். சேமிப்பு கரைந்து விடுமோ என்ற கவலை 90 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவசர செலவுக்கு லோன்

வருவாய் குறைந்ததால், அவசர செலவுகளுக்கு லோன் வாங்க தயங்கவில்லை என சர்வேயில் மக்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, கடனை திருப்பி செலுத்துவது, பள்ளிக்கட்டணம், மருந்துச்செலவு, வீட்டு ரிப்பேர் போன்றவற்றுக்கு லோன் வாங்கப்போவதாக 72 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஏற்கெனவே கடன் வாங்கிய 71 சதவீதம் பேரில், 45 சதவீதம் பேர் 3 மாத தவணை சலுகையை பயன்படுத்தியுள்ளனர் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: