×

சில்லி பாயின்ட்…

* மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து கருத்துக்களை கேட்க FEEDBACK CALL தொடங்கியதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவில் இனவெறி காரணமாக வெள்ளைக்கார போலீஸ்காரரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் புளாய்டின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளை  பிரபல குத்துச்சண்டை வீரர் மேவெதர் ஜூனியர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு ஜார்ஜ் குடும்பம் இன்னும் பதிலளிக்கவில்லை. பிரச்னை தீவிரமாக உள்ளதால் இறுதிச் சடங்குகள் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
*  இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் பெயரை விளையாட்டுத் துறையின் உயரிய கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது.
* பார்முலா 1 கார் பந்தயத்தின் எஞ்சியுள்ள சீசனில் 8 ஐரோப்பிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 2 போட்டிகள் ஆஸ்திரியாவில் ஜூலை 5 மற்றும் 12 தேதிகளில் நடைபெறும். டிசம்பர் மாதம் சீசன் முடிவதற்குள்ளாக 15 முதல் 18 பந்தயங்களை நடத்த முடியும் என பார்முலா 1 நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
* வீரர்கள் அனைவரும் முழு உடல்தகுதியுடன் களமிறங்குவதற்கு தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் 4 கட்ட பயிற்சி திட்டத்தை வகுத்துள்ளோம் என்று இந்திய கிரிக்கெட் அணி பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
*இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். முன்னணி வீரர்கள் தங்கள் கருத்துக்களை தைரியமாகப் பகிர்வது மிக மிக அவசியம் என்று வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் டேரன் சம்மி வலியுறுத்தி உள்ளார்.
* உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பெங்கால் சீனியர் அணி மற்றும் யு-23 அணி வீரர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக விளையாடாமல் வீட்டில் முடங்கி இருக்கும்போது பார்வைத்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிஏபி தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.

Tags : Suresh Raina ,Vijayakumar , Cricketer Suresh Raina, Vijayakumar
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...