×

உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல் விசாரணை தொடங்க வேண்டும்: வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல் நேரடியாக வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அலுவலக பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. கடந்த இரண்டு மாதங்களாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாகதான் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணை குறித்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டதில் 95 சதவீத வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமான வழக்கு விசாரணை ஏதுவானதாக இல்லை. ஆடியோ மற்றும் வீடியோ தரத்தில் உள்ள பிரச்னைகள் காரணமாக உடனடியாக வாதத்தை தொடங்க முடியவில்லை. எனவே, கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் ஜூலை மாதத்தில் நீதிமன்றம் நேரடி வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,trial ,Lawyers Association Supreme Court , Supreme Court, Lawyers Association, Corona
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...