×

கொரோனா எதிரொலி: ஆன்லைனில் இன்ஜினியரிங் சேர்க்கை: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டம்

சென்னை:  தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிட  தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பொறியியல் சேர்க்கைக்கான பதிவுகளை தொடங்க தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. எனவே, பொறியியல் படிப்புக்கான பதிவுகளை ஆன்லைன் மூலம் செய்ய வாய்ப்பளிக்கப்படும். இது தவிர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தனியாகவோ அல்லது கூடுதல் வாய்ப்பாகவோ 4 நாட்கள் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை தொழில் நுட்பக் கல்விக் இயக்ககம் நடத்த முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

அவற்றில் 35 சதவீத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் போக அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொறியியல் சேர்க்கைக்கு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். ந்நிலையில், இந்த ஆண்டும் அதே அளவு மாணவர்கள் பொறியியல் சேர்்க்கைக்கு பதிவு செய்வார்கள் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. சான்று சரிபார்ப்புக்கு மாணவர்களை நேரில் அழைக்காமல் ஆன்லைன் மூலமே சான்றுகளை சரிபார்க்கவும் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் முடிவு ெசய்துள்ளது.  இதற்காக மாவட்ட வாரியாக மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாள் நேரம் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் உண்மை சான்றுகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு ஆன்லைன் மூலம் சான்று சரிபார்ப்பு நடத்தப்படும்.


Tags : Corona, Engineering Admissions, Technical Education Directorate
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...