×

கொரோனாவுக்கு ஆவின் ஊழியர் பலி: சென்னையில் பால் தட்டுப்பாடு அபாயம்

சென்னை: மாதவரம் ஆவின் பண்ணையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் பால்  பாக்கெட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 40 லாரிகள் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும்  அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  பலர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு வர அச்சப்படுவதால் முழுமையாக உற்பத்தி செய்ய அதிகாரிகள் திணறி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் ஆவின் நிறுவன உயர் அதிகாரிகள் பலருக்கும் வைரஸ் தொற்று உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மட்டுமின்றி அலுவலர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஊழியர்கள் பலர் வேலைக்கு வர தயக்கம் காட்டுவதால், உற்பத்தி பாதித்து சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


Tags : Ava ,Chennai ,Corona ,Aavin , Corona, Aavin employee, Pali, Madras, Milk shortage
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...