×

திருக்கழுக்குன்றம் அருகே சோகம்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). அதே பகுதியில் உள்ள, அரசு அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகன் அன்பு (16). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகம், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் வாழ்ந்தார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் ஆறுமுகம், மது அருந்திவிட்டு தகராறு செய்தார். இதனால் மகன் அன்பு, தந்தையை அடித்துள்ளார். இதில், மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த மகன் அன்பு, தன்னால் தந்தை தற்கொலை செய்து கொண்டார் என்ற விரக்தியில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Tragedy ,fatherland , Father, son, executioner, suicide
× RELATED ஐதராபாத்தில் நிகழ்ந்த சோகம்;...