×

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்களை வழிமறித்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.   நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியை சேர்ந்த நபரை ஒரு கும்பல் மடக்கி பணம் பறித்து தப்பினர். இதுகுறித்து அவர் நசரத்பேட்டை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.  அதில், அந்த நபர் செம்பரம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (28) என்பதும், இவருடன் இரண்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு சாலையில் வரும் வாகனங்களை மடக்கி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : raid , Allegedly, 3 arrested
× RELATED பைக் திருட்டு இருவர் கைது: 12 வாகனங்கள் பறிமுதல்