தேர்வு மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சென்றுவர பஸ் வசதி: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தொடங்க உள்ளதை அடுத்து மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள், மாற்றுத் திறன் கொண்ட ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக போக்குவரத் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, மேற்கண்ட மாணவர்களில் 72 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 800 மாற்றுத் திறன் கொண்ட  மாணவ- மாணவியர் விடுதிகளில் தங்கி படித்துவந்தனர். அவர்கள் தற்போது அவர்கள் மீண்டும் விடுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு சென்று வரும் வகையில் 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியரில் தேர்வு எழுதுவதற்காக ஏற்கெனவே தங்கள் பெயர் மற்றும் முகவரி,

தொலை பேசி எண் ஆகியவற்றை ெகாடுத்துள்ளவர்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்–்களில் இருந்து 8ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும். அதே நாள் மாலையில் அதே வாகனத்தில் அவர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள். தேர்வு முடிந்த பிறகு அவர்கள் 26ம் தேதி திரும்பவும் புறப்பட்ட மாவட்டங்களில் விடப்படுவார்கள். அவர்களுடன் பெற்றோர், பாதுகாவலர்கள் பேருந்துகளில் பயணிக்கலாம். பேருந்துகள் புறப்படுவதற்கு 1 மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வர வேண்டும். 

Related Stories: