கொரோனா பாதிப்பு 24,856 ஆக உயர்வு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா: சென்னையில் 806 பேருக்குபாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ெமாத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,856 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் 806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 10,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 806 பேர், செங்கல்பட்டில் 82 பேர், திருவள்ளூரில் 43 பேர், தூத்துக்குடியில் 31 பேர், காஞ்சிபுரத்தில் 15 பேர், திருவண்ணாமலையில் 9 பேர், தேனியில் 5 பேர், திருப்பத்தூரில் 4 பேர்,

நாமக்கல், தஞ்சாவூர், விருதுநகரில் தலா 3 பேருக்கும், திண்டுக்கல், ஈரோடு, திருவாரூரில் தலா 2 பேருக்கும், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, விழுப்புரத்தில் தலா ஒருவர் என்று மொத்தம் 1036 பேருக்கும்  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போன்று ஆந்திரா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த தலா 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,856 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில்  644 பேர் ஆண்கள். 447 பேர். தற்போது வரை 15,394 ஆண்கள், 9179 பெண்கள், 13  திருநங்கைகள் என 24,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று மட்டும் 536 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 10,680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் 13 பேர் சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளனர்.

உயரும் பலி எண்ணிக்கை

சுகாதாரத் துறை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு நேற்று மற்றும் 13 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 50 மற்றும் 55 வயது ெபண், தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வந்த 78 வயது ஆண், 56 வயது ஆண், 73 வயது ஆண், 78 வயது ஆண்,  72 வயது ஆண்  உள்ளிட்ட 5 பேர்,  ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்று வந்த 73 வயது ஆண், 74 வயது ஆண், 70 வயது ஆண், 62 வயது ஆண், 70 வயது  ஆண் உள்ளிட்ட 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைத்தவிர்த்து செங்கல்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆண், ஓமந்தூரார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் உள்ளிட்டோர் மரணம்  அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: