×

கொரோனா பிடியில் சிக்கும் கேரளா; அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 86 பேருக்கு பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,412 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் கடந்த மே 7 தேதி மாநிலத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விமானம், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் இருந்து கேரளத்திற்கு தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.

எனினும் கேரளத்தில் கொரோனாவின் முதல் கட்டத்தில் 30% ஆக இருந்த பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் பாதிப்பு 15% ஆக குறைந்து விட்டது. இதில் தொடர்புகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. தற்போது இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 14 உட்பட 86 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது 774 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இன்று 37 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona Grips Kerala ,Pinarayi Vijayan ,Chief Minister ,Pinarayi Vijayan Corona Grips Kerala , Corona, Kerala, Chief Minister Pinarayi Vijayan
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...