×

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 48.07%-ஆக உள்ளது என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரி லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது;  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது. நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும்.

கொரோனா வைரஸை குறைப்பதற்கான எங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. சமூக பரிமாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கொரோனா பரவலின் அளவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஊரடங்கு சூழ்நிலையில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வைரஸுடன் வாழ கொரோனா வைரஸ் பொருத்தமான நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். கொரோனா சோதனை ஒரு நாளைக்கு சராசரியாக 1.20 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன; தற்போது 476 அரசு, 205 தனியார் ஆய்வகங்கள் இயங்குகின்றன.

Tags : countries ,Central Health Department ,India ,Corona , Corona, India, Comparison, Central Health Department
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...