×

அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இந்த அளவுக்கு நோய் தொற்று பரவி இருக்காது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது என்று சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மற்ற மாவட்டடங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிப்பது சவாலான விஷயமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

* சென்னையில் அரசின் வழிகாட்டுதல்களை யாரும் பின்பற்றுவது இல்லை.

* தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது.

* சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.8% ஆக உள்ளது.

* மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் 56% பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

* வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.

* அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனர்.

* அரசின் வழிகாட்டுதல்களை சென்னை மக்கள் பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

* சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

* தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது.

* கொரோனாவை ஒழிக்க அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் செயல்பட்டால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

* சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இந்த அளவுக்கு நோய் தொற்று பரவி இருக்காது.

* பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இதுவரை 23 ஆயிரத்து 495 பேருக்கு தமிழகத்தில் இன்றைக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.

* குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 170 பேர். சுமார் 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.  தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை 138 பேர். அதேபோல இறந்தவர்கள் எண்ணிக்கை 184 பேர்.

* சரியான முறையிலே நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்ததன் விளைவு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 56 சதவீதம் இருக்கிறது.

Tags : Palanisamy ,government , Government, Disease, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...