அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்...

டிஸ்பூர் : அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். பாரக்  பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேரும், சச்சார் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் தலா 7 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இன்றும் காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நல்பாரி,கோல்பாரா, நாகன் மற்றும் ஹொஜை  ஆகிய மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் 2,678 ஹெக்டரில் விளைப் பொருட்கள் நாசமாகிவிட்டன. 44, 331 கால்நடைகள், 9,350 கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஆளாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

Related Stories: