உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் அமெரிக்கா இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் பேட்டி...!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உண்மையை மறைத்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். சீனாவை சார்ந்திருப்பது, அதற்கு ஆதரவாக செயல்படுவது, ஊழலை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட விவகாரங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி செய்தால், அத்துடன் மீண்டும் சேருவது பற்றி அமெரிக்கா பரிசீலிக்கும்.

Advertising
Advertising

உலக சுகாதார அமைப்புக்காக அமெரிக்கா ரூ.2800 கோடி செலவிடுகிறது. ஆனால் சீனா ரூ.280 கோடி மட்டுமே செலவிடுகிறது. உலக சுகாதார அமைப்பு ஆப்ரிக்காவில் எய்ட்ஸ், எச்ஐவி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ‍வில்லை. வரி செலுத்தும் அமெரிக்கர்களின் தாராள குணத்தினால் அவர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா இதனை உலக சுகாதார அமைப்பு மூலம் செய்யவில்லை. இந்த உதவியை அமெரிக்கா அதன் பெயரிலேயே செய்து வருகிறது. உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை எவ்வித பாகுபாடுமின்றி செஞ்சிலுவை சங்கம், உலகம் முழுவதிலும் நிதி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இது ஊழலில் திளைத்துள்ள, சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக அல்லாமல் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ், உலக சுகாதார அமைப்பின் தொடர்பை அமெரிக்கா துண்டிப்பதாக அறிவித்துள்ள போதும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே WHO விரும்புவதாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் அமெரிக்கா இணைய வேண்டும். மேலும், ஆப்ரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: