அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலினை; மக்கள் அச்சப்பட வேண்டாம்...முதல்வர் பழனிசாமி பேட்டி...!

சென்னை: இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் 1000  கணக்கில் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி,

* சென்னை தவிர மற்ற இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

* சென்னையில் தொற்று பரவலை தடுக்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.

* சென்னையில் 15 மண்டல ஐஏஎஸ் அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

* மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ளதாக தெரிவித்தனர்.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

* இதுவரை பாதிக்கப்பட்ட 23,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56% பேர் குணமடைந்துள்ளனர்.

* கொரோனாவால் குணமடைந்து 13,170 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 1,620 பேருக்கு தொற்று உறுதி.

* உயிரிழப்பு 0.8% தான் உள்ளது; மக்கள் அச்சப்பட வேண்டாம்.

* வெண்டிலேட்டர் பயன்பாடு குறைவு; 5 பேர் மட்டுமே தற்போது வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர்.

* அரசு மருத்துவமனைகளில் 2741 வெண்டிலேட்டர்கள் உள்ளன.

* தமிழகத்தில் வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு இல்லை.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலினை.

* தமிழக அரசு இதுவரை 11,51,700 பிசிஆர் கருவிகளை கொள்முதல் செய்துள்ளது.

* சரியான முறையில் சிகிச்சை அளித்ததின் விளைவாக குணமடைந்தவர்கள் சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

* பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

* இலவச அரிசி, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டதால் உணவு பிரச்சனையில்லை.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து துறை அதிகாரிகளும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்றனர்.

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன.

Related Stories: