×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் எவ்வளவு?:

* விரைவில் அரசாணை வரும்
* அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும், என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதியுடன் மேலும் ஒரு சிறப்பு வார்டு புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேலும் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பஸ் சேவை தொடங்கி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

நோய் தொற்று உள்ளவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள கூடாது. கண்டிப்பாக மருத்துவமனை வந்து கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தாமதிப்பது ஆபத்து.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும். மேலும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கான கட்டணம் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தெரப்பி மூலம் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களில் ஒன்றரை லட்சம் பேரை கண்டறிந்து பரிசோதனை செய்து தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : hospitals ,Corona ,Corona Examination , Corona Examination Fees, Private Hospitals:
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன...