வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்; புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு  முறைகளை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...

* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

* பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.

* வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்

* வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்.

* மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயம்.

* பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி.

* கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

* ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

* அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்துவதற்கான முத்திர பதிக்கப்படும்.

Related Stories: