3 கி.மீட்டருக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்க; இன்று காலை முதல் ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்...!

சென்னை: அடிப்படை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் இயக்கப்படும் மினி கார்களுக்கு 3 கிலோ மீட்டருக்கு 100 ரூபாய் என்றும் கூடுதல் கிலோ மீட்டருக்கு 14 ரூபாய் என்றும் பயண கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 2 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது கால் டாக்சி ஓட்டுநர்களின் கோரிக்கையாகவுள்ளது.

பிரைம் அடிப்படை கட்டணம் 3 கிலோ மீட்டருக்கு 120 ரூபாய், கூடுதல் கிலோ மீட்டருக்கு 15 ரூபாய்,  பயண கட்டணம் பயண கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 2 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகவுள்ளது. இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்திற்கு மேலுள்ள கால் டாக்சி ஓட்டுனர்கள் காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். ola, uber உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு போதிய வருவாய் ஏற்படுத்தி தராத காரணத்தினால், சென்னையில் இருந்து வாகன ஓட்டிகள் தங்கள் கார்களுடன் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணமும் உள்ளனர்.

Related Stories: