×

மணப்பாறை அருகே உடும்பை கொன்று வசிய மை தயாரித்து, யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோதிடர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடும்பை கொன்று வசிய மை தயாரித்து அது குறித்து யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். மணியன்குறிச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்ற ஜோதிடர், அடுத்தவர் வசியும் செய்யும் மை தயாரிப்பது குறித்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு யூ -டியூபில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் இந்த மையை உடும்பை கொன்று தயாரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வனத்துறையினரின் பார்வைக்குச் சென்றதை அடுத்து பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வசிய மை தயாரிப்பது எப்படி என்று போலியாக சுய விளம்பரம் தேட முயன்ற ஜோதிடர் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டு தற்போது சிறையில் உள்ளார்.


Tags : Astrologer ,arrest , Wedding, Beauty, Ink, YouTube, Video, Astrologer, Arrested
× RELATED ரூ.7 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஜோதிடர் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலை