×

வீட்டை உடைத்து கொள்ளை

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், பாரதி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (65). இவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருபவர் கோகுலவாசன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் செல்லப்பாண்டி மாடிக்கு சென்றபோது, கோகுலவாசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.  இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கொள்ளை குறித்து  விசாரித்தனர். அதில்,  கோகுலவாசனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு மனைவியை அழைத்து சென்று இருக்கிறார். வீட்டின் பீரோவில், 13 சவரன் நகை வைத்திருந்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரனையில் தெரியவந்தது.      Tags : robbery ,House , House robbery
× RELATED டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை