மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து: லாரி டிரைவர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (35) லாரி டிரைவர். இவரது நண்பர் கிளார் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (29). அர்ஜுனன் வீட்டுக்கு சரத்குமார் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதனால் அவரது மனைவிக்கும் சரத்குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அர்ஜுனன் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அர்ஜுனன், கடந்த 30ம் தேதி சரத்குமாரை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் உத்திரமேரூர் அடுத்த சித்தமல்லி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது.

Advertising
Advertising

இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரத்குமார் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த சரத்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அர்ஜுனனை கைது செய்தனர்.

Related Stories: