மகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு; 5598 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 8171 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  5598 பேர் உயிரிழந்த நிலையில், 95,527 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2362 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30,108 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  184 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,170 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 20,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  523 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8,746 பேர் குணமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1390 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 277 பேர் குணமடைந்தது.

பீகாரில் 3926 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1900 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 294 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 199 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 547 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 122 பேர் குணமடைந்தது.

கோவாவில் 71 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 17,200 பேருக்கு பாதிப்பு; 1063 பேர் பலி; 10,780 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 2356 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1055 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 420 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1326 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 608 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 8980 பேருக்கு பாதிப்பு; 198 பேர் பலி; 6040 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 659 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 296 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 77 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 83 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 27 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 2104 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1245 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 74 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2301 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 2000 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 958 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 222 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 3408 பேருக்கு பாதிப்பு; 52 பேர் பலி; 1328 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2601 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 946 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 2792 பேருக்கு பாதிப்பு; 88 பேர் பலி; 1491 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 5772 பேருக்கு பாதிப்பு; 325 பேர் பலி; 2306 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 8075 பேருக்கு பாதிப்பு; 217 பேர் பலி; 4843 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3783 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 2378 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 8283 பேருக்கு பாதிப்பு; 358 பேர் பலி; 5003 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 340 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 122 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 3 பேருக்கு பாதிப்பு; 1 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: