×

பஸ் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்காதது ஏன்?: அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில்: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்து கழகங்கள் முன்வர வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில்,  அதை போக்குவரத்துக் கழகங்கள் மதிக்காமல் இருப்பது நியாயமல்ல. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும்.

Tags : bus workers , pay, full salary, bus workers?
× RELATED வண்டியும் ஓடல... வாழ்க்கையும் ஓடல...: தனியார் பஸ் தொழிலாளர்கள் தவிப்பு