விமான பெட்ரோல் விலை 50% அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு மாதத்துக்கான விமான பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் டெல்லியில் ₹33,575.37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கிலோ லிட்டருக்கு ₹12,126.75 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ₹34,569.30 ஆகவும், கொல்கத்தாவில் ₹38,543.48, மும்பையில் ₹33,070.56 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததை தொடர்ந்து, இங்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரித்துள்ளன.  அதேநேரத்தில், வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில், பெட்ரோல் ₹75.54ஆகவும், டீசல் ₹68.22 ஆகவும் நீடிக்கிறது. பெட்ரோல் விலை குறைந்தபோது அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் அளிக்கவில்லை. மாறாக, கொரானா ஊரடங்களால் வரி வருவாய் குறைந்ததை தொடர்ந்து, மாநிலங்கள் வாட் வரியை உயர்த்தின.

இதனால் பெட்ரோல் விலை அதிகரித்தது. தற்போதும், வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை விட விமான பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஊரடங்கால் நீண்ட நாட்களுக்கு பிறகு, விமான சேவை துவங்கியுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, நடுவில் உள்ள சீட்டை காலியாக வைக்க வேண்டும் அல்லது பயணிகளுக்கு பாதுகாப்பு உடை வழங்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் கட்டணம் அதிகம் உள்ள நிலையில், விமான பெட்ரோல் அதிகரிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: