சித்த வைத்தியர் கைது; அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக  தகவல் பரப்பிய திருதணிகாசலம் கைது செய்யப்பட்டார். மேலும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதானார். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தணிகாசலம் சார்பில் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாரம்பரிய மருத்துவம் செய்து வரும் எனக்கு, கடலூர் வருவாய்த்துறை முறையான சான்றிதழ் வழங்கியுள்ளது.

Advertising
Advertising

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே நான் தெரிவித்தேன்.  எனவே, என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் இந்த வழக்கில் உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: