திரைப்படங்களின் வில்லனாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வருகிறார் சோனு சூட்

மும்பை: பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஊரடங்கில் அவர் ஆற்றி வரும் பணிகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. தனது 4 மாடி ஓட்டலை கொரோனா ஒழிப்பு மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி உள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு தினந்தோறும் உணவு வழங்குகிறார். மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து சொந்த ஊர் செல்ல பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

Advertising
Advertising

இப்பணிகளின் உச்சகட்டமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தனி கால் சென்டர் தொடங்கி உள்ளார். இதன்மூலம் கொச்சியில் தவித்த ஒடிசா தொழிலாளர்கள் புவனேஸ்வர் செல்ல, சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த விமானத்தில் 177 தொழிலாளர்கள் பயணித்து, தங்கள் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இன்று 1,000 புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரயிலில் மும்பையில் இருந்து பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தார்.

அவர்களுக்கு தேவையான குடிதண்ணீர், உணவு, சானிடைசர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி வழி அனுப்பிவைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனு சூட் இவை அனைத்தும் மகாராஷ்டிரா அரசு உதவி இல்லாமல் செய்ய முடியாது, அரசு தான் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. இதன் மூலம் சோனு சூட் மக்கள் மனங்களை சோனு சூட் வென்று வருகிறார். திரைப்படங்களின் வில்லனாக தோன்றினாலும் நிஜ ஹீரோவாக சோனு சூட் வலம் வருகிறார்.

Related Stories: