×

5-ம் கட்ட ஊரடங்கில் புதிய தளர்வு: பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி

சென்னை: பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலும், ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 14-ம் தேதி கிழமை முதல் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு  தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது இறுதி சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 50 பேர் பங்கேற்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஊரடங்கிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்தது இருந்த தளர்வு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் போதிய தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசங்கள் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : funeral ,curfew 5th ,government ,Nadu , Curfew, public freeze, funeral, Government of Tamil Nadu
× RELATED சிலுவம்பாளையத்தில் முதல்வர்...