பஸ் நிலையத்தில் தற்காலிக கடை அரசு பேருந்துகள் சாலையில் நிறுத்தம்: திண்டிவனத்தில் விபத்து அபாயம்

திண்டிவனம்: திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால் அரசு பேருந்துகளை சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு நேரு வீதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டு, இந்திரா காந்தி பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரே உள்ள யூனியன் கிளப் மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்திராகாந்தி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால் பேருந்து நிலையம் உள்ளே செல்லாத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை முதல் இயக்கப்படும் பேருந்துகள் இந்திராகாந்தி பேருந்து நிறுத்தம் எதிரே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்திராகாந்தி பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: