தமிழகத்தில் மேலும் 1,162 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: