தாஜ்மஹாலை தாக்கிய பயங்கர இடி; மும்தாஜ் கல்லறை மேற்கூரை சேதம்!!

ஆக்ரா : ஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மும்தாஜ் கல்லறை மேற்கூரை சேதமடைந்துள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் இடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertising
Advertising

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது தாஜ்மகாலில் இடி தாக்கியது. இதில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது.தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் சேதமடைந்துவிட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும், தாஜ்மகாலை சுற்றியுள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: