×

கடல் நீரிலிருந்து பேட்டரி

நன்றி குங்குமம் முத்தாரம்

இன்று  மனித வாழ்க்கையில் லித்தியம் அயனி பேட்டரி முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், இந்த பேட்டரிகளில் சேர்க்கப்படும் கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும் வேதிப் பொருள்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன என்ற புகார்களும் எழுந்துள்ளன. பிரபல கணினி தயாரிப்பாளரான ‘ஐ.பி.எம்’ நிறுவனம் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காத பேட்டரிகளைத் தயாரிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

கோபால்ட், நிக் கலுக்கு பதிலாக அது பயன்படுத்தும் மூன்று முக்கியமான வேதிப் பொருட்களை சாதாரண கடல் நீரில் இருந்தே எடுக்கலாம் என்று ஐ.பி.எம்., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த மூன்று பொருட்கள் எவை என்பது ரகசியம். கடல்  நீர் பொருட் களைப் பயன்படுத் தினாலும் அந்த பேட்டரிகள் ஐந்தே நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் பெற்றுவிடும் திறன் உடையவை. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த பேட்டரிகள் ஏற்றதாக இருக்கும்.

தொகுப்பு: க.கதிரவன்

Tags : Battery from seawater
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...