ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கலால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகப்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

Advertising
Advertising

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், மேலும், வேறு பயங்கவாதிகள் பதுங்கியுள்ளார்களா என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைபோல் நேற்று முன்தினம், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்பூரா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களில் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: