சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.36,096 விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. நகை விற்பனை இன்னும் சூடுபிடிக்கும் என்ற நிலையில் வரும் நாட்களில் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

சென்னையில் மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 1) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,508 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் மட்டும் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 32 ரூபாய் உயர்ந்து 36,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.53.80 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.54.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: