×

சில்லி பாயின்ட்...

* ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா பெயரை தொடர்ந்து 3வது முறையாக கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
* இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து வலியுறுத்தி உள்ளார்.
* ஹாக்கி இந்தியா தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.
* ஆஸ்திரியாவில் ஜூலை 5 மற்றும் 12ம் தேதிகளில் பார்முலா 1 கிராண்ட் பிரீ பந்தயங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கிரிக்கெட் விளையாடப்படும்போது மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். ஆனாலும், வீரர்கள் உட்பட அனைவரது பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய நேரம் இது என்று இலங்கை அணி முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கரா கூறியுள்ளார்.

Tags : Chili Point ...
× RELATED சில்லி பாயின்ட்...