×

வீட்டில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (63). இவர் நேற்று முன்தினம் கவரப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், இரவு மர்ம நபர்கள் அவரது வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 8 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சகுந்தலா அளித்த புகாரின்ேபரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : home , Loot, home
× RELATED தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்...