×

புதுமாவிலங்கையில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை சாலை, சமுதாய கூடம் இடையே வயல்களின் வழியாக வண்டிப்பாதை செல்கிறது. இதன் வழியாக விவசாயிகள் தங்களது நிலத்திற்கு இடுபொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். 


இந்நிலையில், புதுமாவிலங்கை முதல் சத்தரை கிராமம் வரை உள்ள இந்த வண்டிப்பாதை அருகில் உள்ள நில உரிமையாளர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால், வயல்களுக்கு உரம் போன்ற இடுபொருட்கள், அறுவடை செய்த நெல் மூட்டைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல முடியவில்லை.


இதுகுறித்து, பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.  வருவாய் அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் முறையாக தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், சிலர் வண்டிபாதையை மீண்டும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதுமாவிலங்கை முதல் சத்தரை வரை வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : New Year , Carriageway ,Occupation , New Year
× RELATED விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி