×

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டை சேர்ந்தவர் மஞ்சுளா (46). இவரது கணவர் இறந்தவிட்டதால் குழந்தைகளுடன் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 12 மணியளவில் திடீரென இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரத்தை துண்டித்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த துணி மணி, பாத்திரங்கள், குடும்ப அட்டை, சான்றிதழ்கள் மற்றும் ₹12 ஆயிரம் ரொக்கம் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்த கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மின் கசிவால் தீ பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ பற்றியதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : fire ,cottage , Sudden fire , cottage
× RELATED ஈரோட்டில் கட்டி முடித்து ஒரு ஆண்டாக...