மகாராஷ்டிராவில் பாதிப்பு 67,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.90 லட்சமாக உயர்வு; 5394 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8392 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 230 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 5394 பேர் உயிரிழந்த நிலையில், 91,819 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2286 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 29,329 பேர்  குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 22,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,757 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 19,844 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 473 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8,478 பேர் குணமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1272 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 185 பேர் குணமடைந்தது.

பீகாரில் 3815 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1710 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 293 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 199 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 498 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 115 பேர் குணமடைந்தது.

கோவாவில் 70 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 16,779 பேருக்கு பாதிப்பு; 1038 பேர் பலி; 9919 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 2091 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 1048 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 313 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1269 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 590 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 8831 பேருக்கு பாதிப்பு; 194 பேர் பலி; 5927 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 610 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 256 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 74 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 71 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 27 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 1948 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1126 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 70 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2263 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 1987 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 907 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 102 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 3221 பேருக்கு பாதிப்பு; 51 பேர் பலி; 1218 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2446 பேருக்கு பாதிப்பு; 28 பேர் பலி; 927 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 2698 பேருக்கு பாதிப்பு; 82 பேர் பலி; 1428 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 5501 பேருக்கு பாதிப்பு; 317 பேர் பலி; 2157 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 7823 பேருக்கு பாதிப்பு; 213 பேர் பலி; 4709 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3679 பேருக்கு பாதிப்பு; 62 பேர் பலி; 2349 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 4 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 8089 பேருக்கு பாதிப்பு; 350 பேர் பலி; 4842 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 331 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 120 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: