×

சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனோ பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து பொது போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆட்டோ, டாக்சி, சலூன் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண்டலம் விட்டு மண்டலம் செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பாக புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி மண்டலங்களுக்கு உள்ளே பயணம் செய்ய இ-பாஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 8வது மண்டலம் (சென்னை காவல் எல்லை) தவிர்த்து மற்ற மண்டலங்களுக்கு செல்பவர்கள் தங்களின் தகவல்கள் tnepass.tnega.org இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு வருபவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். சென்னை காவல் எல்லை பகுதியில் இருந்து (8வது மண்டலம்) மற்ற மண்டலங்களுக்கு எந்த வாகனத்தில் சென்றாலும் இ-பாஸ் வாங்க வேண்டும். இவர்களுக்கு அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று இல்லாதவர்கள் 7 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். வியாபார ரீதியாக 48 மணி நேரத்திற்குள் சென்று திரும்பும் வகையிலான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரயில் மூலம் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் தங்களது தகவல்களை இ-பாஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பாஸ் பெற வேண்டும். இவர்களில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் நோய் தொற்று இல்லாத அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இறுதியில் நோய் இல்லை என்று கண்டறியப்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Tags : districts ,Chennai ,Govt , Coronation test mandatory,traveling ,Chennai,outer districts: Govt
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...