அதிமுக அரசின் அதிகார அத்துமீறல்: இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: எதிர்கட்சியான திமுக தனித்தும் மற்ற ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு இணைந்தும் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறது. சகிப்புத் தன்மை இல்லாத அதிமுக, தனது பலவீனங்களையும், தவறுகளையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதன் முன்னணியினர் மீது புனைவுக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

Advertising
Advertising

நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் நான்கைந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதிமுக அரசின் சட்ட அத்துமீறல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராடி, அதிமுகவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்கிறது.

Related Stories: