×

கொரோனா பாதித்த விமானியிடம் விதிகள் முறையாக பின்பற்றவில்லை ஏர் இந்தியா விமானிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா பாதித்த விமானி விவகாரத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் அவர் துன்புறுத்தப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் குற்றம்சாட்டி உள்ளனர். டெல்லியில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நோக்கி நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. உடனடியாக தகவல் தெரிவித்து, விமானம் திருப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமானி கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. அச்சங்கம் ஏர்இந்தியா நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘விமானிக்கு கொரோனா என்றதும், மற்ற சக விமானிகள் அனைவரும் ஒருநாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை.

கழிவறைக்கு செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம், கொரோனா பாதித்த விமானியும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார். டெல்லி ஏர்போர்ட்டில் உள்ள மருத்துவ அதிகாரிகளால் விமானி கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அரசு மருத்துவ மையத்தில் 7 நாள் அவர் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டார். நிர்வாக தனிமைப்படுத்தும் மையத்தில் விமானியை தனிமைப்படுத்த மறுத்ததாலேயே, அவரை 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க அனுமதித்தனர். இந்த விஷயத்தில் எந்த நடைமுறையையும் மருத்துவ அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை’’ என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற துன்புறுத்தல் இருந்தால், தங்களால் எப்படி விமானங்களை இயக்க தைரியத்துடன் பணிக்கு வர முடியும் என்று விமானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : pilots ,Air India ,Corona , Air India pilots,allege ,Corona,not follow ,rules
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...