×

நோய் பாதிப்பு அதிகம் இருந்தும் அட்மிட் செய்ய மறுப்பு; கொரோனா நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே துடிதுடித்து இறந்தார்: வீட்டு தனிமை என்ற பெயரில் நோயாளிகளுக்கு மருத்துவம் புறக்கணிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே துடிதுடித்து இறந்தார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி இருந்ததால், தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முன்தினம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, அவரது உறவினர்கள் கொரோனா அவசர பிரிவிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால், ஆம்புலன்ஸ் அனுப்பவில்லை, என கூறப்படுகிறது. இதனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டுபோது, அங்கு போதிய இட வசதி இல்லை எனவும், பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டில் தனிமைப்படுத்தும்படியும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, முதியவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு முதியவர் உயிரிழந்தார். சுகாதாரத்துறையின் அலட்சியமே முதியவர் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  இதனிடையே, தகவலறிந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வந்து முதியவர் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது சடலம் காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த முதியவரின் மகனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : patient ,Corona ,home , Refusal, high prevalence, Corona patient, suffocated , medical neglect of patients , name of home isolation
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...