‘நீட்’டில் விட்டோம்; ஆனால் மின்சாரத்தில் விடமாட்டோம்: புகழேந்தி, அதிமுக செய்தி தொடர்பாளர்

இலவச மின்சாரத்தை பொருத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்து, விவசாயிகளுக்கு 100 யூனிட் இலவசம் என்ற நிலையில் மின்சாரம் கொடுத்துக் கொண்டு வந்தோம். அதெல்லாமல் வறுமைகோட்டுக்கு கீழே உள்ள 78.55 லட்சம் மக்களுக்கு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் கட்டண பில்லே வராது. இதனால் மக்கள் காலகாலமாக பயன்பெற்று வருகின்றனர். இப்போது மத்திய அரசு வந்து, மின் கட்டண மானியத்தை வங்கி கணக்குல போடுங்க, இல்லையெனில் அவங்களுக்கு கொடுக்குற இலவச மின்சாரத்தை கணக்கிட்டு எங்களுக்கு பணத்த கொடுத்துடுங்க என்று மின்சார  புதிய  சட்ட மசோதா மூலம் மத்திய அரசு கேட்பதெல்லாம், மாநில அரசின் உரிமையை பறிப்பது போல் உள்ளது. 203/3 சட்டப் படி 3 சதவீதத்திற்கு மேல் கடன் பெறக்கூடாது என்றெல்லாம் கூறுவதும் உரிமையை பறிப்பது போல் உள்ளது. வாங்கிய கடனை மத்திய அரசு ஒன்றும் கட்டப்போவதில்லை, மாநில அரசு தான் கட்டப் போகிறது. இந்த மின்சார புதிய சட்ட மசோதா எப்படி இருக்கிறது என்றால், ஒரு மகனை நான் சின்ன வயதில் இருந்து படிக்க வைத்து, எல்லா வசதிகளும் செய்து கொடுத்து, அவனை ஒரு ஐ ஏ எஸ், ஐபிஎஸ் ஆக உருவாக்கிய பின். வேறு ஒருவர் வந்து, இந்த பையன் உங்களுக்கில்லை, நான் எடுத்து செல்கிறேன் என்று கூறி பறித்து செல்வதுபோல் உள்ளது. மத்திய அரசின் இந்த சட்டம்.

இதற்கு மத்திய அரசு என்ன காரணம் சொல்கிறார்கள் என்று பார்த்தால், மின்சார திருட்டு, பண கணக்கு வராமல் போகிறது என்பது தான். அரசால் செயல்பாடும் மின்துறையில் பணத்தில், கணக்கில் பிரச்னை என்று நீங்கள் கூறுவதெல்லாம், மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில், முதல்வர் எடப்பாடி, மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுப்பதற்கே வழியில்லை என்ற நிலையில் தொடர்ந்து போராடுகிறார். மேலும், இதில் மத்திய அரசு தலையிடுவதையே மாநில அரசு விரும்பவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காததற்கான சட்டத்திற்கு எங்கள் அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வரே பிரதமருக்கு கடிதம் மூலம் வற்புறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் கடிதத்தில், கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரத்துறையில் நஷ்டம் என்றால், மத்திய அரசு நடத்தும் ரயில்வே, இந்தியன் தபால்துறையில் நஷ்டம் இல்லையா? தபால் துறையில் மட்டும் ரூ. 15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. ஏர் இந்தியாவில் நஷ்டம் ஏற்படவில்லையா. இதையெல்லாம் மத்திய அரசு நடத்துகிறதே. ஜிஎஸ்டியை எதிர்த்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

இருந்தாலும், இயற்றப்பட்டு ஒத்துபோனாலும். இந்த மின்சார விஷயத்தில், அரசு ஒருபோதும் மத்திய அரசுடன் ஒத்துபோவதாக இல்லை. விட்டு கொடுப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் மின்சாரத்துக்காக தமிழக அரசு பெற்ற கஷ்டம் கொஞ்சம் கிடையாது. இப்போ வந்து நாங்கள் கையாளுகிறோம் என்றால் என்ன ஆவது? மேலும் தஞ்சை மண்டலத்தை சிறப்பு மண்டலமாக மாற்றி தமிழக அரசுக்கு தான் விவசாயிகளின் நல்லது கெட்டதெல்லாம் புரியுமே தவிர, வடக்கே இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. இலவச மின்சாரம் தடைபடுவதை விட மாட்டோம். இது எங்களின் உரிமை. மத்திய அரசு தலையிடவே கூடாது. நீட் விவகாரத்திலும் போராடினோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

ஆனால் மின்சார விஷயத்தில் எந்த காலகட்டத்திலும், மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. சமாதானம் செய்து கொள்ளாது. 18 சதவீத ஜிஎஸ்டி என்று தொடங்கினார்கள், தற்போது 4 சதவீதத்தில் வந்து, தோல்வியடைந்துள்ளது. ஜிஎஸ்டி வருமானத்தை மாநில அரசுகளுக்கும் கொடுக்க முடியவில்லை. மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எனவே உரிமைகளை பறிப்பதை இந்த அரசு ஏற்றுக்கொள்ளாது.

Related Stories: