ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..! திமுக கூட்டணி தீர்மானம்

சென்னை: கொரோனா தொடங்கிய காலம் முதலே திமுக தலைமையிலான கூட்டணி அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம்சாட்டி வந்தது. குறிப்பாக ஆளும் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைகளை கண்டறிந்து, அதற்கு இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று ஏராளமான ஆலோசனைகளை வழங்கி வந்தது. இந்த நிலையில், அரசு மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

* இரண்டு மாதங்களுக்கு மேல் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் அளிக்க வேண்டும்.

* முதுநிலை மருத்துவப்படிப்புகளில் ஓபிசி பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும்

* விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து மின் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும்.

பொதுமுடக்கத்தின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தலா 1,000 ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கான ரேஷன் பொருள்களை இலவசமாக அளித்துள்ளது. அத்துடன் ஜூன் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களும் இலவசமாக அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: