×

கோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 20 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1,237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக அதிக பாதிப்புகள் பரவிய நிலையில், இன்று அதை விட அதிகமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓரளவு கட்டுக்குள் இருந்த பாதிப்பு எண்ணிக்கை, கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பலருக்கும் பரவியது. தற்போது, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும் பரவுகிறது. அதன்படி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்;


வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள்; 99,651

* பன்னாட்டு விமானம் மூலம் 2,731 பேர் வருகை: 92 பேருக்கு கொரோனா பாதிப்பு

* உள்நாட்டு விமானம் மூலம் 9,927 பேர் வருகை : 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

* ரயில்கள் மூலம் 10,222 பேர் வருகை : 221 பேருக்கு கொரோனா பாதிப்பு

* சாலை வழியாக வாகனங்களில் 76,771 பேர் வருகை: 1237 பேருக்கு பாதிப்பு


உள்நாட்டு விமானங்களில் தமிழகம் வந்தவர்களில் கொரோனாவால் 20 பேர் பாதிப்பு

* சென்னை- 102 விமானங்களில் 5,697 பேர் வருகை: பாதிப்பு இல்லை

* கோவை - 30 விமானங்களில் 2,656 பேர் வருகை: 10 பேர் பாதிப்பு

* மதுரை - 17 விமானங்களில் 1,070 பேர் வருகை : 7 பேர் பாதிப்பு

* திருச்சி - 9 விமானங்களில் 504 பேர் வருகை : 3 பேர் பாதிப்பு

Tags : Coimbatore ,Tamil Nadu ,Corona , Coimbatore, Outlander, Overseas, Tamil Nadu, Corona
× RELATED சோசியல் மீடியாக்களில் தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு