தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு திட்டம்: தென் கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக வாரம் ஒரு முறை பிசிஆர் கருவிகளை தமிழக சுகாதாரத்துறையானது வாங்கி வருகிறது. அதில் குறிப்பாக மொத்தம் 10 லட்சம் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தமானது போடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு லட்சம் கருவிகள் மற்றும் 1.50 லட்சம் கருவிகள் என ஒவ்வொரு வாரமும் வந்திருக்கிறது. இதில் தற்போது நேற்று இரவு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகளானது தமிழகம் வந்துள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று 1.50 லட்சம் கருவிகள் வந்திருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 5.20 லட்சம் பிசிஆர் கருவிகள் உள்ளன. குறிப்பாக நாள்தோறும் சராசரியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளானது செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று வரை 4,79,155 மாதிரிகளானது பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வரக்கூடிய காலங்களில் மேலும் பரிசோதனை செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கப்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 72 பரிசோதனை மையங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக 43 அரசு பரிசோதனை மையங்களிலும் 29 தனியார் பரிசோதனை மையங்களுக்கும் தற்போது வந்துள்ள 1.50 லட்சம் பிசிஆர் கருவிகளானது பிரித்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகமானது தெரிவித்துள்ளது.

Related Stories: