கொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பு; மருத்துவமனை அலட்சியத்தால் முதியவர் வீட்டிலேயே மரணம்

சென்னை: சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர் வீட்டிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முதியவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை இருப்பதாக கூறி முதியவரை அழைத்து செல்ல ஆம்புலஸ் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நோய் தொற்று உறுதியானதை அடுத்து 4 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து அலைக்கழிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை அலட்சியத்தால் கொரோனா நோயாளி உயிரிழந்திருப்பது புதுவண்ணாரப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த முதியவரின் மகனுக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: