×

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை

நாகர்கோவில்: சம்பளம் பிடித்தம் செய்வும் அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 11 மாதங்களில் போக்குவரத்து ஊழியரின் வருகை பதிவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் சராசரி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல வர ஒய்வு நீக்கப்பட்டு விடுப்பாக கணக்கிடப்படுகிறது. இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனை கண்டித்து தமிழகத்தில் 330 பணிமனைகள் முன்பாக அவர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தை நடத்தினர். சென்னையில் பல்லவன் இல்லம், திருவெற்றியூர் பணிமனைகளில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல திருத்தணி, செஞ்சி  உள்ளிட்ட இடங்களிலும் பணிமனைகள் முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.


Tags : Transport workers ,Tamil Nadu , Transport, workers , Tamil Nadu,demand , full pay
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்