நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 8,380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 193 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5491-ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 89,995 பேர் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 86,984-ஆக அதிகரித்துள்ளது

இதனால் கொரோனா நோய் தடுப்பு மண்டலத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளது அவசியம். சிறை கைதிகள் மற்றும் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: