மகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. கடந்த   24 மணிநேரத்தில் மட்டும் 8380 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 193 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால்   இதுவரை 5164 பேர் உயிரிழந்த நிலையில், 86,984 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertising
Advertising

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2197 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28,081 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 21,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,000 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 18,549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8075 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1185 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 163 பேர் குணமடைந்தது.

பீகாரில் 3636 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 1618 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 289 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 189 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 447 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 102 பேர் குணமடைந்தது.

கோவாவில் 70 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 16,343 பேருக்கு பாதிப்பு; 1007 பேர் பலி; 9230 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 1923 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 971 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 268 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 172 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1208 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 575 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 8617 பேருக்கு பாதிப்பு; 193 பேர் பலி; 5739 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 563 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 256 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 74 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 62 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 8 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 27 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 1819 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1050 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 51 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2233 பேருக்கு பாதிப்பு; 44 பேர் பலி; 1967 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 749 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 102 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 2922 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 997 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2341 பேருக்கு பாதிப்பு; 28 பேர் பலி; 908 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 2499 பேருக்கு பாதிப்பு; 77 பேர் பலி; 1412 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 5130 பேருக்கு பாதிப்பு; 309 பேர் பலி; 1970 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 7445 பேருக்கு பாதிப்பு; 201 பேர் பலி; 4410 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3569 பேருக்கு பாதிப்பு; 60 பேர் பலி; 2289 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 4 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 7891 பேருக்கு பாதிப்பு; 343 பேர் பலி; 4444 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 313 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 111 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: